பகீர் சிசிடிவி காட்சிகள்... 4 வயது சிறுமி கார் மோதி உடல் நசுங்கி பலி... சைக்கிள் ஓட்டிய போது விபரீதம்!

 
திஷா
குழந்தைகள் பள்ளிமுடிந்து வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் நண்பர்களுடன் தெருவில் இறங்கி விளையாடும்.  தற்போதைய வாழ்க்கை முறையில் தெருவில் விளையாட இடமில்லை இதனால் அவரவர் வீட்டு பார்க்கிங்கில் சைக்கிள் ஓட்டி பொழுதை கழிக்கின்றன. அந்த வகையில் குஜராத் மாநிலம் மெஹ்சானா பகுதியில் திஷா பட்டேல் என்ற 4 வயது சிறுமி, ஸ்பர்ஷ் வில்லா சொசைட்டி வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. சிறிது நேரம் கழித்து, அவர் முன்னே ஒரு கார் வந்தது.

 


காரை பார்த்த சிறுமி சமநிலையை இழந்து சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். ஆனால் சுதாகரித்து எழுவதற்குள், அந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

ஆம்புலன்ஸ்

சிறுமியின் மீது கார் மோதியவுடன் காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஓட்டுநர் சிறுமியை பார்க்க வெளியே வருகிறார். அதற்குள் சிறுமி உயிரிழந்து விட்டார். கார் மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web