பெரும் சோகம்.... 40 ஆடுகள் தீவிபத்தில் உடல் கருகி பலி... கதறித் துடித்த உரிமையாளர்!

 
தீயில் கருகிய ஆடுகள்

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சின்னாளபட்டி  பித்தளைப்பட்டியில் வசித்து வருபவர் 50 வயது  மெம்மேலி. இவர்  300க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.  சுற்று வட்டாரப்பகுதிகளில் விவசாய நிலங்களில் ஆட்டுக் கிடை அமைக்கும் பணியும் செய்து வருகிறார்.   திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பிள்ளையார்நத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்துவிடுவார்.

தீயில் கருகிய ஆடுகள்

பெரிய ஆடுகளை மட்டும் மேய்ச்சல் நிலங்களில் மேயவிட்டு மாலையில் அழைத்து வருவார். இரவு 7 மணிக்கு ஆடுகளை பட்டிகளில் கொண்டு வந்து அடைத்துவிடுவார்.  வழக்கம் போல் நேற்று காலையும்  40க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு ஒரு நாயையும் காவலுக்கு வைத்துவிட்டு வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.   மாலை பட்டி அருகில் உள்ள பருத்திக் காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ காற்றின் வேகத்தால் பட்டியிலும் பரவியது.

தீயில் கருகிய ஆடுகள்

பட்டிக்குள் அடைக்கப்பட்ட ஆடுகள் வெளியே வரமுடியாமல் கத்தி கூச்சலிட்டன. இதனை காக்க ஒரு நாயையும் வளர்த்து வந்தார். அதுவும்   கத்தி கத்தி ஓய்ந்து தீக்கு இரையாகியது.  இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி  தீயை அணைத்தனர். ஆனால், பட்டியில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆட்டுக் குட்டிகள், நாயை காப்பாற்ற முடியவில்லை.  மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய மெம்மேலி ஆட்டுக்குட்டிகள் இறந்து கிடந்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web