4,000 போலீசார் பாதுகாப்பு.. அக்.11 முதல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடக்கம்!

 
தசரா துர்கா

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தசரா திருவிழா அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை விமரிசையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 20-ம் தேதி நடைபெறுகிறது.

குலசை தசரா

திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருவிழாவின் முக்கிய நாள்களான அக்டோபர் 18 முதல் 21 வரை 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக 150-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், குடிநீர், சுகாதாரம், தற்காலிகக் கழிப்பறைகள் மற்றும் மின் விளக்கு வசதிகளைத் தடையின்றிச் செய்து தரத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.