41 வயது மணமகள் 16 வயது மணமகன்!! வயதை மீறிய காவியக்காதல் !!

 
மரியானா

இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தனில் வசித்து வருபவர் மரியானா. இவருக்கு வயது 41. இவருடைய தோழி லிசாவின் மகன் கெவின். கெவினை சின்னஞ்சிறு வயதிலிருந்தே தோழி வீட்டுக்கு செல்லும் போது பழக்கம்.  அச்சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மரியானாவின் கடைக்கு தின்பண்டங்கள் வாங்க அடிக்கடி சென்று வருவான்.   இருவரது வீடும், அடுத்தடுத்து இருப்பதால் இருவரும் வயது வித்தியாசம் பாராமல்  நண்பர்களாகவே பழகி வந்தனர். இந்நிலையில் தான்  லிசாவின் மகன் கெவின் மீது மரியானாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.  

மரியானா

16 வயது கெவின் 41 வயது மரியானாவும் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருமணம் செய்ய திட்டமிட்டனர்.   இதனையடுத்து அந்த மைனர் பையனுக்கும், 41 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.  கெவின் தன்னை விட 25 வயது மூத்த பெண்ணான மரியானாவை மணந்ததில் மிகவும் மகிழ்ச்சி என அவரது தாய் லிசாவும் கூறினார்.   இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படத்தையும் லிசா சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.   மரியானாவிடம் உள்ள சொத்திற்காகத் தான் அவர் தனது மகனை திருமணம் செய்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.  

மரியானா


இந்த சூழலில்தான், அந்த தம்பதி திருமணமான 4  வது நாளே பிரிந்துவிட்டனர். இந்த திருமணம் குறித்த சர்ச்சை   இந்தோனேஷியாவில் பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறி, மேற்கு கலிமந்தனில் உள்ள இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு  இந்த விஷயம் சென்றுள்ளது.
இந்தோனேசியாவை பொறுத்தவரை ஆண் பெண் திருமண வயது 19 தான். இதனால்  கெவினுக்கு  19 வயதாகும் வரை  இருவரும் தனியாக இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் இந்தோனேஷியா  சட்டத்தின் படி  ஒரு ஆண் மற்றும் பெண், 21 வயதில்   பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம் . இதன் அடிப்படையில் மரியானா மீது, மைனர் பையனை திருமணம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தொடர் சர்ச்சைகளால்  பீதியான கெவினின் தாய் லிசா, மரியானாவை தற்போது விவாகரத்து செய்துவிடச்சொல்லி மகனிடம் மன்றாடி வருகிறார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web