41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்: தமிழக அரசு!!

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 
தமிழ்நாடு அரசாணை

மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளில் எராளமான திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகின்றது. அதிலும் பெண்கல்  உயர்கல்வி கற்க ஏதுவாக அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறத். மேலும் மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களை உயர் கல்வி கற்க வைக்கும் அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றது.  தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களால் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியிடங்கள் பல்கலைக்கழகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்.மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருப்பின், அந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம், மண்டல இணை இயக்குநர்கள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேற்கண்ட தகவல் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web