தொழிலாளர்கள் மீட்பு பணி.. தயார் நிலையில் மருத்துவமனை.. சுரங்க வாசலில் ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர்..!!

 
உத்தரகாண்ட் சுரங்க விபத்து

17 நாட்களுக்குப் பிறகு சற்று நேரத்தில் 41 தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ள நிலையில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் 4.5 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையின் ஒருபகுதி கடந்த 12ம் தேதி இடிந்து மண் சரிந்தது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அமெரிக்காவின் ஆகர் துளையிடும் கருவி மூலம் 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 800 மிமீ அகல இரும்பு குழாய் அமைத்து தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

உத்தரகாண்ட் சுரங்க விபத்து

இந்த நிலையில், சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த அவசரகால பொது பாதுகாப்பிற்காக இருக்கும் இடத்தில் அந்த 41 பணியாளர்களும் பத்திரமாக தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். கடந்த 17 நாட்களாக பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும், இயந்திரங்கள் போராடிய நிலையில் இன்று நவம்பர் 28ம் தேதி இன்னும் சிறிது நேரத்தில் மீட்கப்பட உள்ளனர். பத்து பேர் மீட்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த செய்தி இன்னும் உறுதியாகவில்லை.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து

இதனையடுத்து தொழிலாளர்களை மீட்கப்பட்ட உடன் தயார் நிலையில் உள்ள 41 ஆம்புலன்ஸ்களில் அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். அதே போல தயார் நிலையில் சில ஹெலிகாப்டர்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web