43000 பேர் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட மாரத்தான்!! அமைதிப் பேரணி!!

 
மாரத்தான்


தமிழகத்தில்   முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை  நினைவை போற்றும் வகையில், தமிழக இளைஞர்களுக்கு மராத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  இந்த மராத்தான் போட்டிகள் நடத்தப்படவில்லை.  இதில் கலந்து கொள்ள பதிவுக் கட்டணமாக 42 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டிக்கு ரூ.500ம், 21 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் பங்கேற்க ரூ.300ம் நிர்ணயிக்கப்பட்டது.

மாரத்தான்

இது மட்டுமின்றி 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. மராத்தான் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் வசூலிக்கப்பட்ட பதிவுக் கட்டணங்கள், வசதியற்ற குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் தொடங்கும் மராத்தான் போட்டி பட்டினப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடிய உள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் 43320 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 10 ஆயிரத்து 985 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கலைஞர் கோயில் நினைவிடம்
அதே போல் 42 கி.மீ. தொலைவு கொண்ட மராத்தான் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50000 ம், 3ம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25000ம் பரிசு வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.மராத்தான் போட்டியின் பதிவுத்தொகையாக ரூ.1.21 கோடி  பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை சுகாதாரத்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த மராத்தான் போட்டியில்  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளின் துணைத் தூதர்கள் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web