கட்சி மாநாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் 44 பேர் பலி!! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 
பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்  பஜார் மாவட்டத்தில் J.U.I.F  அரசியல் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட தலைவர்கள்  தொண்டர்கள் கலந்து கொண்ட னர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில்   தலைதெறிக்க ஓடினர்.இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஜேயூஐஎஃப் கட்சியின் உள்ளூர் தலைவர் மவுலானா ஜியாஉல்லா உட்பட   44 பேர் உயிரிழந்துள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட   100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என  அஞ்சப்படுகிறது.இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்துவழக்கு பதிவு செய்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்   இது ஒரு வகையான  மனித வெடிகுண்டு தாக்குதல் என்பதும், 12 கிலோ வெடிபொருள் இதற்காக பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு

 இன்னும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தத் தாக்குதலுக்கு  எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர்   கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த கோர சம்பவம் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த மாகாண அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  சம்பவ இடத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு

மேலும் இந்த மனித  குண்டு வெடிப்பில் படுமோசமாக காயமடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலம் பெஷாவர் கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன என  தெரிவித்துள்ளார்.இந்நிலையில்   தங்கள் கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்,   இதுகுறித்து முறையான விசாரணை வேண்டும் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என  ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web