வியட்நாமில் சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விபத்து - 44 பேர் மீட்பு ... 18 பேரைத் தேடும் பணி தீவிரம்!

 
வியட்நாம்  கடலில் மூழ்கி

தென் சீனக் கடல் பகுதியில் 62 மாலுமிகளுடன் பயணித்த வியட்நாமைச் சேர்ந்த சரக்குக் கப்பல் திடீரென நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீனக் கடல் வழியே சென்றுகொண்டிருந்தபோது கப்பல் திடீரென மூழ்கத் தொடங்கியதால், அதிலிருந்த மாலுமிகள் உடனடியாகக் கடலோரக் காவல் படைக்கு அவசர உதவிக்கான அழைப்பை விடுத்தனர்.

ஆற்றில் மூழ்கி

அவசர அழைப்பைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் சீனக் கடற்படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் நடுக்கடலில் தவித்த 44 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இருப்பினும், நீரில் மூழ்கிய 18 மாலுமிகள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் வியட்நாம் மற்றும் சீன மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் நடுக்கடலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.