45 வருஷ கமெண்ட்ரி வாழ்க்கை! பிரபல கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல் திடீர் ஓய்வு!

 
இயான் சேப்பல்

45 வருடங்களாக தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்த பிரபல கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல், தனது ஓய்வை அறிவித்துள்ளார்.  ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல். இவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளராக பொறுப்பேற்று சிறப்பாக செய்து வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக  75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,345 ரன்களைக் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் சில ஆண்டுகள்  சிறப்பாக விளையாடினார். ஓய்வுக்கு பிறகு சுமார் 45 ஆண்டுகளாக கமெண்ட்ரி செய்து வந்த சேப்பல், தனது 78 வது வயதில் வர்ணனைகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். "எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நான் எண்ணிய தருணம் தற்போதும் நினைவில் இருக்கிறது.

இயான் சேப்பல்

அன்று நான் நிறைய கிரிக்கெட் விளையாடி விட்டதாக உணர்ந்தேன்.  நான் விளையாடியது போதும். இனி செல்ல வேண்டும் என நினைத்த உடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டேன். அதன் பிறகு கமெண்ட்ரியில் ஆர்வம் திரும்பியது. "ஆஸ்திரேலியாவில் பிரபல ஊடக ஜாம்பவான் கெர்ரி பேக்கர்  2 முறை என்னை கிரிக்கெட் வர்ணனையில் இருந்து நீக்க வேண்டும் என முயற்சி செய்தார். இவருடைய மகன் மிக மோசமாக விளையாடியதால் அதனை அப்படியே வர்ணணை செய்து விட்டேன். அதனால் என் மீது கோபம் கொண்டு என்னை அப்போதே வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்தார்.

இயான் சேப்பல்

நான் தொடர்ந்து அமைதி காத்து வந்ததால்  இத்தனை ஆண்டு காலம் எனக்கு பிடித்த வேலையில் பங்களிப்பு தொடர்ந்தது. நாங்கள் விளையாடிய  காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக மவுசு இருந்தது.  டெஸ்ட் போட்டியின் மோகம் மிகவும் குறைந்து விட்டது.  இன்றைய காலகட்டத்தில் பலரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி இருக்கையில் யார் தான் டெஸ்ட் போட்டிகளை விளையாட முன் வருவர். அது தான் மிகப்பெரிய கேள்வி. டி20 மோகம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு போட்டிகளின் மோகம் இருக்கும்.

அதே நேரத்தில் பாரம்பரியத்தை ஒரு போதும் இழந்து விடக் கூடாது என்பதையும் உணர வேண்டும். டெஸ்ட் போட்டிகள் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே மொத்த கிரிக்கெட்டும் உயிர்ப்போடு இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது  திடீரென கமெண்ட்ரி வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார். இதனையடுத்து இவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். அத்துடன்  கடைசி காலத்தில் ஓய்வு எடுங்கள் . ஆரோக்கியத்தை பேணுங்கள் என  அறிவுரையும் வழங்கி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web