நடிகை ராதிகா 45 வருட சாதனை !! கேக் வெட்டி கொண்டாட்டம்!!

 
ராதிகா 45

தமிழ் திரையுலகில் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1978ல்  திரையுலகில் அடியெடுத்து வைத்த  நடிகை ராதிகா, திரையுலக குடும்பத்து வாரிசு என்றாலும் நடிப்பின் மீது ஆர்வம் எதுவும் இல்லாமல் தான் நடிக்க வந்திருந்தார்.  வெளிநாட்டு படிப்பு வாசத்தோடு  நுனி நாக்கு ஆங்கிலத்தோடு ராதிகா தாயகம் திரும்பியிருந்த சமயம் அது.

பேண்ட், ஷர்ட் என மாடர்ன் உடையில் இருந்தவரை முகத்தில் தெரிந்த  வாஞ்சைக்காக தன் வெள்ளந்தி கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார் இயக்குநர்  பாரதிராஜா.  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் பெரிய திரை மட்டுமல்லாது, சின்னத்திரையிலும் கோலோச்சியவர் .  நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத் திறமை உடையவர்.

ராதிகா

 திரையுலகில் 45 வருடங்கள் நிறைவு செய்திருப்பதை அடுத்து அவருக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள்  வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து அவரது கணவர் சரத்குமார் ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்   ‘இந்த பயணத்தைச் சுற்றி நிறைய கடுமையான உழைப்பு இருக்கிறது. வாழ்த்துகள்! இதற்கு நீ தகுதியானவள் தான். உன் பயணத்தில் நானும் இருப்பதில் பெருமையே’ என பதிவிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web