4,724 செவிலியர் பணியிடங்களுக்கு 49,000 பேர் விண்ணப்பம் - பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் பணி தொடக்கம்!

 
நர்ஸ் செவிலியர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர்

தமிழக அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய நலவாழ்வு குழுமம் சார்பாக தமிழக அரசு மருத்துவமனைகளுக்காக 4,724 செவிலியர் பணியிடங்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்

மாநிலம் முழுவதும் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கங்கள் மூலம் நிரப்பப்படும் இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 49,000 செவிலியர்கள் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு நேற்று முதல் பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்கள் நர்ஸ் போராட்டம்

ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வதற்குச் சில செவிலியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஏராளமான செவிலியர்கள் ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.