காதலனுடன் லாட்ஜில் இருந்த இளம்பெண் கடத்தி கூட்டுப் பலாத்காரம் - 5 பேர் கைது!
கேரள மாநிலம் திருச்சூரில் காதலனுடன் லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலப்புரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலன் குணசேகரனுடன் திருச்சூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். இந்தத் தகவல் அறிந்த குணசேகரனின் மனைவி தேவி, தனது நண்பர் தாமஸ் என்பவரின் உதவியுடன் ஒரு கும்பலை ஏவி, காதலர்கள் இருவரையும் காரில் கடத்திச் சென்றுள்ளார்.

கடத்தல் கும்பல் குணசேகரனின் கைகால்களை அடித்து உடைத்து வழியில் இறக்கிவிட்டுவிட்டு, இளம்பெண்ணைக் காரிலேயே அழைத்துச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கேரள காவல்துறையினர், தேவி, தாமஸ், பால்ராஜ் உட்பட 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
