ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்! அடுத்தடுத்து ஒன்றாக இறந்த சோகம்!

 
5 குழந்தைகள்

ராஜஸ்தானில், 7 மாத கர்ப்பிணியாக பெண்ணுக்கு திடீரென பிரவச வலி ஏற்பட்டு, குறை பிரசவத்தில், அடுத்தடுத்து 5 குழந்தைகள் பிறந்தன. தாய், தந்தை, உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவருமே 5 குழந்தைகள் பிறந்ததையடுத்து மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சில மணி நேரம் கூட மகிழ்ச்சி நீடிக்காமல், அடுத்தடுத்து ஒவ்வொரு குழந்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் குரோலியில் உள்ள மசல்பூரில் உள்ள பிப்ராணி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ரேஷ்மா. திருமணமான இவர், கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் ரேஷ்மா கர்ப்பம் தரித்து கடந்த திங்கட்கிழமை காலையில் தனியார் மருத்துவமனையில் பிரசவ வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். 

அங்கு ஒரே நேரத்தில் ரேஷ்மாவுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 5 குழந்தைகள் பிறந்தன. அவை அனைத்தும் 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததால் ஒவ்வொரு குழந்தையும் 300 கிராம் முதல் 660 கிராம் வரை குறைந்த எடையில் மிகவும் பலவீனமாக காணப்பட்டனர். இதனால் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 5 குழந்தைகளையும்  ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லும் படி பரிந்துரைத்தனர். 

குழந்தை

இதனால் அதிர்ச்சியடைந்த ரேஷ்மா மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக 5 குழந்தைகளையும் ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லும் வழியில் கிராலி என்ற இடத்தில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூரை நெருங்குவதற்குள் ஒரு குழந்தையும், ஜெய்ப்பூரை அடைந்ததும் 5வது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை

7 வருடத்திற்கு பிறகு கருத்தரித்த ரேஷ்மாவுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் தத்தளித்தார்கள். அதைத்தொடர்ந்து குறை பிரசவம் என்பதால் 5 குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்ததால் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web