நாளை விடுமுறை கிடையாதா? ஏக்கத்தில் 5 மாவட்ட மாணவர்கள்!!

 
மாணவிகள்

நாளை  ஆடிப்பெருக்கு, வல்வில் ஓரி தினம், தீரன் சின்னமலை நினைவு தினம் இவைகளுக்காக ஈரோடு சேலம், திருப்பூர், நாமக்கல், தர்மபுரி என 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக  ஆடிப்பெருக்கு வெள்ளம் கரை புரண்டோடும் காவிரியில் ஸ்ரீரங்கம் பெருமாள் அம்மா மண்டபத்தில் தங்கைக்கு சீர் கொடுத்து வரவேற்பார். சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களும் தங்கைக்கு சீர் கொடுப்பது இங்கு வழக்கமாக இருந்து வருகிறது.

மாணவிகள் அரசு பள்ளி

ஆனால்  இதுவரை காவிரி கரைப்புரண்டோடும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதனால்  அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   ஆடிப்பெருக்கிற்கு  விவசாயிகள் மற்றும் புதுமணத் தம்பதிகள்   பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரி அன்னைக்கு பழங்கள்,  பூ  சமர்ப்பித்து வழிபாடு செய்வார்கள்.  இந்த ஆண்டு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக நாளை தர்மபுரி மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்   உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் .  ஆடிப்பெருக்கு என்றாலே காவிரியில் புரண்டோடும் புதுவெள்ளமும், அதற்கு ஈடாக  ஆற்றங்கரைகளில் கூடும் ஆயிரக்கணக்கான புதுமணத் தம்பதிகளும் தான்  ஞாபகத்திற்கு வருவார்கள்.

மாணவிகள்


திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு தினத்திற்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை.   அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆடி 18 தினத்திற்கு விடுமுறை விடப்பட்டால்  மாணவர்கள் மட்டுமல்ல  விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web