ஒரு காதலனுக்காக 5 காதலிகள் குடுமிபிடி சண்டை..! அவன் என் லவ்வர்..! காத்துவாக்குல 5 காதல்..!

 
சண்டை

பீகாரில்   ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் அங்கு நடந்த கண்காட்சி ஒன்றுக்கு சென்று உள்ளார். இதை அந்த கண்காட்சிக்கு வந்த இளைஞரின் மற்றொரு காதலி பார்த்துவிட்டார். பின்னர் அந்த இளைஞரியம் இதுகுறித்து கேட்டு தகராறு செய்து. இதை அந்த இளைஞரின் இன்னொரு காதலி பார்த்துவிட்டார். அவரும் ஆவேசமாக வந்து சண்டை போட்டார். இப்படியே மொத்தம் 5 காதலிகள் ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்துவிட்டனர்.

காதல்

இவர்களுக்கு நடுவே அந்த காதலன் மாட்டிக்கொண்டார். 5 பேரையும் ஒரே சமயத்தில் இளைஞர் சாமர்த்தியமாக ஏமாற்றி வந்துள்ளார். 5 பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்தும்,   ஆடைகளை  இழுத்தும், கண்காட்சியிலேயே சண்டை போட்டுக்கொண்டனர். இவர்கள் சண்டைபோட்டதை அங்கிருந்த பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததுடன்,   வீடியோ எடுத்தனர்.

சண்டை

"அவன் என் லவ்வர், அவன் என்னுடைய பாய்பிரண்ட்" என்று 5 பேரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.   ஒரு பெண்ணிற்காக ஆண்கள் அடித்துக்கொண்ட காலம் மாறி இன்று ஒரு ஆணிற்காக பெண்கள் அடித்துக்கொள்கின்றனர் என்று இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் முனுமுனுத்து சென்றனர்.

From around the web