பழுதடைந்த பேருந்திலிருந்து கீழே நின்ற பயணிகள் மீது லாரி மோதி 5 பேர் பலி - பங்களாதேஷில் சோகம்!
பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங் அருகே உள்ள சிதாகுண்டா பகுதியின் குமீரா ராயல் கேட் அருகே, இன்று அதிகாலை 1 மணியளவில் பயங்கர வீதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
சிட்டகாங்கில் இருந்து நெட்ரோகோனா நோக்கிப் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குமீரா பகுதியில் பேருந்து பழுதடைந்ததால், பயணிகள் அனைவரும் இறங்கிச் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இந்த கொடூர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இப்ராஹிம் (6) என்ற சிறுவன் மற்றும் ஸ்வப்னா என்ற பெண் அடங்குவர். எஞ்சிய 3 பேரின் அடையாளங்களைக் காவல்துறையினர் கண்டறிந்து வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த பேருந்தில் இருந்து இறங்கி நின்ற பயணிகள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
