மதுரை மேலூர் அருகே கோர விபத்து - குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரச் சாலை விபத்தில், பெண் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, மேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டிச் சாலையின் மறுபுறத்திற்குப் பாய்ந்தது. அப்போது, எதிரே நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியதில் இந்த கோர விபத்து நேரிட்டது.

இந்த கொடூர விபத்தில் இரண்டு கார்களில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சிலரை மீட்புக் குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
