தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர் குடும்பங்களுக்கு மேலும் 5லட்சம்!! முதல்வர் அதிரடி!!

 
துப்பாக்கி சூடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில்  துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த தாக்குதலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், தனியார் மற்றும் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

அந்த ஆணையம் தமிழக அரசுக்கு அளித்துள்ள அறிக்கையின் மீது கடந்த மாதம் 19ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.


அதன்படி அந்த அறிவிப்பின்படி தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 13 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.65 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web