சுதந்திர தினவிழா கொண்டாட்டம்... சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,000 போலீசார்... கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம்!

சென்னையில் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 9,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சென்னை விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் என முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தபட்டுள்ளது.

அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் அனைத்து தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
