நூடுல்ஸ் சாப்பிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு!

 
நூடுல்ஸ் மரணம் தற்கொலை சாப்பிட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரபுபுரா பகுதியைச் சேர்ந்த மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35) மற்றும் குழந்தைகள் லட்டு (11), மிஷ்டி (7), சக்‌ஷத் (3) ஆகியோர் நேற்றிரவு நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். காலையில் அவர்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இரவில் சாப்பிட்ட நூடுல்ஸ் உணவில் நஞ்சு கலந்ததால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில் உணவில் நச்சுத்தன்மை இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் உடனடியாகச் சிக்கவில்லை.

உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.