ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை... புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இளங்குடிபட்டியில் நமனசமுத்திரம் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்தி வைத்து விட்டு 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்சனை காரணமாக தற்கொலை 5 பேரும் தற்கொலைச் செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த விபரீத முடிவு எடுத்துள்ளனர்.
முன்னதாக நமனசமுத்திரத்தில், சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கார் குறித்து பொது மக்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பார்த்ததில், காருக்குள் 5 பேர் சடலமாக இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக, தடயவில் மற்றும் மருத்துவ நிபுணர்களை வரவழைத்தனர்.
காரில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைச் செய்து கொண்ட 5 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!