ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் வாட்ஸ்அப் எண் மூலம் கிடைத்த 5 புதிய தகவல்கள் – காவல்துறை தகவல்!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கில், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வெளியிடப்பட்ட வாட்ஸ்அப் எண் மூலம் 5 புதிய முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் புகார்களைப் பெறக் காவல்துறை தரப்பில் பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாகக் காவல்துறையினருக்கு 5 புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

வீரமணி மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது குறிப்பிடத்தக்கது.
