பள்ளிக் கட்டிட விபத்தில் 5 மாணவிகள் காயம்... டிஎஸ்பி.யிடம் அதிமுகவினர் பரபரப்பு மனு !

 
மாணவிகள்

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் ராஜா அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் இந்த பள்ளிக்கு பொதுத்தேர்வு எழுதச்சென்றனர். 

மாணவிகள்

இந்த நிலையில், மாணவிகள் சிலர் கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற 5 மாணவிகள் காயமடைந்தனர். இதற்கு பள்ளி நிர்வாகத்தில் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டினர். 

மாணவிகள்

இந்த நிலையில், பள்ளிக் கட்டிட விபத்தில் அலட்சியத்துடன் செயல்பட்ட பள்ளி நிர்வாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, டிஎஸ்பி.யிடம் அதிமுகவினர் மனு அளித்தனர். பள்ளி நிர்வாகிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் ஏராளனோர் சென்று இந்த மனு அளித்தனர். அப்போத மாணவிகள் காயம் ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

From around the web