சென்னையில் இன்று 5 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

 
புறநகர் மின்சார ரயில்

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (செப்டம்பர் 10) ஐந்து புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மூர் மார்க்கெட் மற்றும் சூலூர்பேட்டையில் இருந்து இயக்கப்படும் குறிப்பிட்ட சில சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூர் மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டை மற்றும் ஆவடி செல்லும் ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நெல்லூர் மற்றும் மூர்மார்க்கெட் செல்லும் ரயில்களும், மேலும் நெல்லூரிலிருந்து சூலூர்பேட்டை செல்லும் ரயிலும் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தினசரி பயணிகள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்வோர்கள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.