வனப்பகுதியில் சிக்கி பலியான 5 தொழிலாளர்கள்!! பண்டிகை கொண்டாட சென்ற போது பரிதாபம்!!

 
வனப்பகுதி

இந்திய,  சீன எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அருணாசல பிரதேசத்தில் குரூங்குமே மாவட்டத்தில் இந்திய& சீன எல்லையை ஒட்டிய, தமின் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் சாலை கட்டுமானப் பணியில்  தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் இருந்தனர்.

சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டனர். இருப்பினும் ஒப்பந்ததாரர்  அனுமதி மறுத்ததால், யாருக்கும் தெரியாமல் தொழிலாளர்கள் வனப்பகுதி வழியில் கால்நடையாக சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குழு இரண்டாக பிரிந்து சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 23ம் தேதி 7 பேர் மீட்கப்பட்டனர். கடுமையான பாதிப்புக்கு ஆளான அவர்களுக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது அசாமை சேர்ந்த 5 தொழிலாளர்கள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹ¨ரி மற்றும் தபா என்ற பகுதிகளுக்கு இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இவர்களின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களில் ஹிக்மத் அலி என்பவர் புராக் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web