வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டு சிறை... துணை முதல்வர் சட்டமசோதா தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு போன்ற சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டவை, பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகிவிடுகின்றனர்.
இதனால், அவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்கி விடுகின்றனர். இது போன்ற சமயங்களில் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கி இருக்கும் நபர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றி வருகின்றனர்.
அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலைக்கு கூட தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இதிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை, கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயர் அரசு மூலம் நியமிக்கப்படுவர் கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த சட்டமசோதா முன்வரைவு தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அதில் அதிமுக உறுப்பினர்கள் சில திருத்தங்களை கோரியுள்ளனர். இந்த சட்ட முன்வரைவு தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு அரசாணை வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்படும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!