50 % பேருந்துகள் நிறுத்தம்!! பொதுமக்கள் கடும் அவதி!!

 
கேரள பேருந்து

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில்  அரசு சார்பில்  போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் கேரளாவில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கான கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரள பேருந்து

தற்போதைய நிலையில் கேரள அரசுபோக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன. இதனையடுத்து போக்குவரத்துக் கழகம் தற்போது, ​​தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  நிறுவனமும்  நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும்  முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இன்று (டிசம்பர் 07) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இதன் காரணமாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைக்க முடிவு செய்துள்ளது. டீசல் தட்டுப்பாடு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.  இதனிடையே, கனமழை காரணமாக பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம்  விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web