கள்ளச்சாராயத்தால் பறிபோன 50 உயிர்கள்!! பகீர் சம்பவம்!!

 
கள்ளச்சாராயம் பலி

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோத மது விற்பனை அண்மை காலமாக அதிகரித்து வருவதாகவும், அதுவும் கிராமங்களில் இந்த கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கள்ளச்சாராயம்

பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா பகுதியில் உள்ள கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் கடந்த திங்கள் கிழமையும் சிலர் செவ்வாய்க்கிழமையும் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. முதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை   50 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்களுக்குக் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம்

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பது தொடர்ந்து நடந்தாலும் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 2016-ஆம் ஆண்டு பிகாரில் மது விற்பனை செய்யவும் அருந்தவும் மாநில அரசு தடை விதித்தும் இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடர்வது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரிக்க பீகார் போலீசார் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web