ஒரே கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் 50 பேர் பலி!! சுகாதாரத் துறை அதிர்ச்சி!!

 
மர்ம காய்ச்சல்


சத்தீஷ்கர் மாநிலத்தில் சுஷ்மா மாவட்டத்தில் ரெக்டாகட்டா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநில எல்லையை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. இதில் சுமார் 800 பேர் வசித்து வருகின்றனர். 

கொரோனா

போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய வசதியும் இல்லாத இந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சலினால் கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. மேலும் காய்ச்சலுடன் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகிறது. இதைத்தொடர்ந்து எந்த சிகிச்சை அளித்தாலும் பலனளிக்காமல் அவர்கள் பரிதாபமாக உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இப்படி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 50 பேர் மர்ம நோய் தாக்கி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கொரோனா


இதனால் குழம்பிப் போன கிராம மக்கள் என்ன செய்வதென்று அறியாமல் கவலையில் உள்ளனர். இதைத்தொடர்ந்து ரெக்டாகட்டா கிராமம் மற்றும் அதனை சுற்றி 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து மண் மற்றும் குடிநீரை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். 

இதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். த்தீஷ்கர் மாநிலத்தில் பருவமழை தொடங்கும் சமயத்தில் மர்ம நோய் பரவி வருவது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web