மாணவர்களுக்கு 50% கல்விக் கட்டணச் சலுகை: அமைச்சர் அறிவிப்பு!
Aug 22, 2026, 08:55 IST
திருக்கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அறநிலையத்துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் பயிலும் அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும்.
திருக்கோயில்களுக்குத் தேவையான தகுதியான பணியாளர்களை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்யத் தனி 'திருக்கோயில் தேர்வு வாரியம்' அமைக்கப்படும்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாட்டிலுள்ள முக்கியத் திருக்கோயில்களில் பொது விருந்து (சமபந்தி போஜனம்) அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
