சீமானுக்கு அடுத்தடுத்து ஷாக்... மேட்டூர் தொகுதி துணை தலைவர் உட்பட 500 பேர் கட்சியிலிருந்து விலகல்!

 
சீமான்
 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  மீது அடுத்தடுத்த  குற்றச்சாட்டுகளை  கட்சியினர் சமீபகாலமாக முன்வைத்து வருகின்றனர்.  அதனையடுத்து கூண்டோடு கட்சியிலிருந்து விலகியும் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியிலிருந்து 3000 பேர் விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.‌

சீமான்

இந்நிலையில் இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் துணைத் தலைவர் ரகு உட்பட 500 பேர்‌ நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். ஜால்ரா போடும் நபர்களுக்கும் பணம் கொடுத்து பொறுப்பு வாங்கும் நபர்களுக்கு மட்டும் தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன.  

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

அதனால் தான் கட்சியிலிருந்து விலகுவதாகவும் ரகு கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் பலர் விலகி வருவது ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web