500 ஆண்டு பழமையான மூழ்கிய போர்க்கப்பல்: சிதையாத போர்க்கவசம் கண்டெடுப்பு!

 
காசா

 

தெற்கு ஸ்வீடனின் ரோன்னெபி கடற்கரைக்கு அருகே பால்டிக் கடலில் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் 500 ஆண்டுகள் பழமையான போர்க்கப்பலில் இருந்து, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட போர்க்கவசம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகக் கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய அகழாய்வில் இந்தக் கவசம் மீட்கப்பட்டுள்ளது.

Medieval armour discovered on centuries old Danish shipwreck

கிரிபின் எனப்படும் இந்தப் போர்க்கப்பலின் முன்பகுதிப் போர் மேடைக்குக் கீழே இருந்த ஆயுதப் பெட்டிக்கு அருகில் செப்புக் கலவையால் ஆன சங்கிலிப் பின்னல் கவசம் கிடைத்துள்ளது. பால்டிக் கடலில் உப்புத்தன்மை குறைவாக இருப்பதாலும், கடல் புழுக்களின் தாக்கம் இல்லாததாலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் இது சிதையாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது.

A 500-year-old shipwreck has revealed a hidden piece of history. Our maritime archaeologists have discovered centuries-old chain mail on the submerged wreck of a royal Danish warship. They were

1495-ஆம் ஆண்டு டென்மார்க் மன்னர் ஹான்ஸுக்குச் சொந்தமான இக்கப்பல் தீப்பிடித்து வெடித்து மூழ்கிய நிலையில், கப்பலில் பயணித்த ஜெர்மன் கூலிப்படையினருக்கு இக்கவசம் சொந்தமானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.