இன்று தாராபுரத்தில் முதல்வர் விஜய் தீவிர பிரச்சாரம் - 5,000 பேருக்கு அனுமதி!

 
விஜய் பிரச்சாரம்

தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரம்மாண்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

விஜய் பிரச்சாரம்

தாராபுரம் சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் காரணங்களால், முன்னதாக 10,000 பேருக்குத் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது 'QR குறியீடு' கொண்ட சிறப்பு நுழைவுச் சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குக் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விஜய் பிரச்சாரம்

பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தாராபுரம் சென்று பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்றே இரவு சென்னை திரும்புகிறார்.