மத்திய அரசில் 5,043 காலி பணியிடங்கள்! உடனே அப்ளை பண்ணுங்க!

 
மத்திய அரசு வேலை

மத்திய அரசு அலுவலகமான இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த 5,043 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி உதவியாளர், இளநிலை பொறியாளர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள  இந்திய உணவுக் கழகத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு மேற்கு வடகிழக்கு ஆகிய மண்டலங்களில் இந்த காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


2,388 காலியிடங்கள் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், 989 காலி பணியிடங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலி பணியிடங்களும், 712 காலிபணியிடங்கள் குஜராத், மத்தியபிரேதசம் ஆகிய மாநிலங்களிலும் நிரப்பப்பட உள்ளன. அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 185 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலை வாய்ப்பு முகாம்
நாளை (6ம் தேதி) காலை 10 மணி முதல் வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி மாலை 4 மணி வரையில் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இந்திய உணவுக் கழகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

இளநிலை பொறியாளர் பதவிக்கு 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், சுருக்கெழுத்தாளர் பணியிடத்துக்கு 25, உதவியாளர் நிலை3க்கு 27 வயது என்றும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தல் அறிவிப்பு!!  இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் சுருக்கெழுத்தாளர் மற்றும் உதவியாளர் நிலை3க்கு பொது மற்றும் உணவு தானிய கிடங்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு 2 கட்டங்களாக நடக்கும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web