ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிட்ட 51 இந்தியர்கள் உயிரிழப்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

 
ரஷ்ய ராணுவம் இந்தியர்கள்

உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்ய ராணுவத்திற்காகப் பணிபுரிந்த இந்தியர்களில் 51 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் சூழலில், சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக ஆசை வார்த்தைக் கூறி மொத்தம் 227 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் துரதிர்ஷ்டவசமாகப் போர்க்களத்தில் சிக்கி 51 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக அரசுக்குத் அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன்

இந்திய அரசின் தீவிர முயற்சிகள் மற்றும் மாஸ்கோ தூதரகத்தின் தொடர் பேச்சுவார்த்தைகள் காரணமாக, இதுவரை 139 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுப் பத்திரமாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் குண்டுவீச்சு

ராணுவத்தில் இன்னும் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், போலி முகவர்களின் வாக்குறுமைகளை நம்பி ஆபத்தான வெளிநாட்டு வேலைகளில் சேர்வதை இந்தியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.