55000 பணியிடங்கள் நிரப்பப்படும்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
ஸ்டாலின்

நேற்று இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோட்டையில் நேற்று  முதல்வர்  மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை  ஏற்றி வைத்து சுதந்திர தின விழா சிறப்பு உரையாற்றினார். அதில்  " அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டு போய் சேர்க்கின்ற பணியில் இருப்பவர்கள்.

அரசு அலுவலகம்

இவர்கள் தான் பாராட்டுக்குரியவர்கள். திட்டங்கள் இல்லாத நாளே இல்லை என சொல்லக்கூடிய வகையில் தினமும் ஆய்வறிக்கைகள், பரிசீலிப்புக்கள்.  ஆட்சி  சக்கரம் சுழல்வதற்கு அவர்களே முழு முதற் காரணமாக இருந்து வருகின்றனர்.   அந்த கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

ஸ்டாலின்

அப்போது தான் வேகம் அதிகமாகும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்பது திராவிட மாடல் அரசு.  நடப்பு ஆண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55000  பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இது போன்ற திட்டங்களைச் சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம்" என முதல்வர்  பேசியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web