சென்னையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - வடமாநில இளைஞர்கள் வெறித்தனம்!

 
பாலியல்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் 5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் தன் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுமிக்குச் சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் சிறுமியை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்துப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், அப்பகுதியில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த ராகுல் (26) என்பவர் சந்தேகத்திற்குரியவராக அடையாளம் காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை அதிரடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அல்ல என்றும், இவ்வழக்கில் ராகுல் மட்டுமே தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இதனிடையே, விசாரணையின்போது காவல்துறையினர் வருவதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சில புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது அவர்களைப் பொதுமக்கள் பிடித்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது; உடனடியாகக் காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.