சதுரகிரி மலையேற 6 நாட்கள் செல்ல அனுமதி !! அதிரடி உத்தரவு!!

 
சதுரகிரி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை   மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம்  . இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64000  ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வருடத்தின் எல்லா நாட்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக இதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அந்த வகையில் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம்,சிவராத்திரி  தினங்களில்மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என   மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்தனர்.   அந்த சமயத்தில் கூட  சதுரகிரி மலைக்கு செல்லும் பாதையான நாவல் ஊத்து பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. உடனடியாக கோயிலுக்கு சென்ற 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலில் தங்க வைக்கப்பட்டனர்.  

சதுரகிரி

அவர்களுக்கு அங்கேயே தங்குவதற்கு தேவையான வசதிகளை வனத்துறையினர் செய்து கொடுத்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துடன் மலையேற தடையும் விதிக்கப்பட்டது.  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web