கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு - சக மீனவர்களால் தப்பிய உயிர்!

 
நடுக்கடல்

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு மூழ்கிய நிலையில், சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் - மணப்பாடு இடையே கடலில் தருவைகுளத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் அலைச் சீற்றம் காரணமாக, அவர்கள் சென்ற விசைப்படகின் அடிப்பகுதி எதிர்பாராதவிதமாகப் பிளந்தது. இதனால் படகுக்குள் நீர் புகுந்து கடலில் மூழ்கத் தொடங்கியது.

ஆற்றில் மூழ்கி

படகு மூழ்கத் தொடங்கியதும், சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் உடனடியாக அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகிற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த சக மீனவர்கள், கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் காயமின்றிப் பத்திரமாக மீட்டுத் தங்கள் படகில் ஏற்றினர். தற்போது கடலில் மூழ்கிய படகைக் கயிறு கட்டி மீட்டு, கரைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.