அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்!

 
அதிமுக தவெக

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில அளவில் முக்கியப் பொறுப்புகளை வழங்கத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள்: அதிமுகவிலிருந்து விலகி இணைந்த முக்கிய முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோருக்கு மாநில அளவில் விரைவில் பொறுப்புகள் ஒதுக்கப்படவுள்ளன.

அதேபோன்று, தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிப் பொறுப்புகள் வழங்கத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் தவெகவின் கட்டமைப்பைப் பலப்படுத்தவும், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அனுபவம் வாய்ந்த இந்த முக்கிய நிர்வாகிகளுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.