பெரும் சோகம்... 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி... பரிதாபமாக உயிரிழப்பு!

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், குண்டுலுபேட்டின், ஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி சுபா. 6 மாதங்களுக்கு முன்புதான் சுபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. காது குத்தும்போது, குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்கும் நோக்கில், பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர் நாகராஜு, குழந்தையின் இரண்டு காதுகளிலும், அனஸ்தீஷியா மயக்க மருந்து ஊசி போட்டுள்ளார். அதற்கு ரூ 200 கட்டணமும் பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு ஊசி போட்ட நிலையில், அனஸ்தீஷியா அதிக வீரியம் கொண்டதாக இருந்ததால், குழந்தையின் வாயில் நுரை வரத் தொடங்கியதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். இதனால் உடனடியாக தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.
பெற்றோரும் குழந்தையை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த பெற்றோர், ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!