பகீர் வீடியோ.... 40 மாடிக் கட்டிடத்தில் அறுந்து விழுந்த லிப்ட்!! 6 பேர் பலி!!
மகாராஷ்டிரா மாநிலம் தானே பால்கும் பகுதியில் 40 மாடிக் கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 'லிப்ட்' அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணி முடிவடைந்ததும் 7 தொழிலாளர்கள் லிப்டில் ஏறி செயல்படும் திறனை சோதித்துக்கொண்டிருந்தனர். செயல்பாடுகள் சரியாக உள்ளனவா என பரிசோதிக்கும் பணியில் அனைத்தும் சரியே என ஒரு சில முறைகள் மேலும் கீழும் சென்று வந்தனர். அப்போது, திடீரென லிப்ட்டின் கம்பி அறுந்து விழுந்தது.
#WATCH | Five people died, and a few were injured after a lift collapsed in Maharashtra's Thane: Thane Municipal Corporation pic.twitter.com/AuDiVms1aW
— ANI (@ANI) September 10, 2023
இதனால் உயரத்தில் சென்று கொண்டு இருந்த லிப்ட் பயங்கர சத்தத்துடன் மிக வேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில், லிப்டுக்குள் இருந்த தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி துடித்தனர். மற்ற பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, தானே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.அவர்கள் வந்து சேர்வதற்குள் லிப்ட்டுக்குள் சிக்கிய 5 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 தொழிலாளிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மற்றொருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான தொழிலாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லிப்ட் அறுந்து விழுந்து 6தொழிலாளர்கள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.