தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் துடிதுடித்து பலி... 4 பேர் படுகாயம்!
குஜராத் மாநிலத்தில் பரூச் மாவட்டத்தில் தனியார் வேன் லாரி மீது மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் . நேற்று இரவு 11 மணிக்கு மக்னாட் கிராமத்திற்கு அருகிலுள்ள ஜம்புசார்-அமோத் சாலையில் வேதாச் கிராமத்தில் வசித்து வரும் 10 பேர் சுக்லதீர்த் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இந்த விபத்து நடந்ததாக ஜம்புசார் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் "மக்னாட் கிராமத்திற்கு அருகே சாலையின் இடது புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றி சென்ற தனியார் வேன் மோதியது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் ஜம்புசாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்கள் ஜெய்தேவ் கோஹில் (23), சரஸ்வதி கோஹில் (21), ஹன்சா ஜாதவ் (35), சந்தியா ஜாதவ் (11), விவேக் கோஹில் (16), கீர்த்தி கோஹில் (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" . இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!