60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

 
சூறாவளி

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பாதுகாப்பின் அடையாளமாக 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம்

சீரற்ற வானிலை மற்றும் காற்று எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளைத் துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.