சேலத்தில் காவலாளியைத் தாக்கிவிட்டு 600 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை!
சேலம் மாநகர் சினிமா நகர் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிக் குடோனில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 600 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலசுப்ரமணி என்பவருக்குச் சொந்தமான வெள்ளிப் பொருட்கள் குடோனில், முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நுழைந்துள்ளது. குடோனில் பணியில் இருந்த காவலாளியைச் சரமாரியாகத் தாக்கிய அந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 600 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துத் தப்பியோடினர்.

இச்சம்பவத்தைக் குறித்துத் தகவலறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு மற்றும் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
