தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

புரட்டாசி  மாதம் முடிந்த நிலையில், ஆபரண தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேயடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது இல்லத்தர்சிகளை அதிர்ச்சியடைய செய்தது. இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது. 

தங்கம் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்து தங்கம் வாங்க செல்வதே சிறந்தது என்பதால் தினசரி தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தங்கம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,821-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 62 ரூபாய் உயர்ந்து, ரூ.3,883-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,700 ரூபாய் உயர்ந்து, ரூ.63,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web