61,84,566 கேக் துண்டுகள் கொள்முதல்... குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு உத்தரவு!
Updated: Oct 11, 2026, 09:30 IST
வரவிருக்கும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசாகக் கேக் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.9.27 கோடி மதிப்பில் கேக்குகளைக் கொள்முதல் செய்யத் தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மொத்தம் 61,84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கேக்கின் எடையும் சரியாக 45 கிராம் இருக்க வேண்டும் என்றும், கேக்குகளின் காலாவதி காலம் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 30 நாட்கள் எஞ்சியிருக்க வேண்டும் என்றும் அரசு கடுமையான தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
