10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 6ஜி தொழில்நுப்டம்!! மோடி அதிரடி!!

 
6ஜி

இந்தியாவில் 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26-ம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கி 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் போனது.

6ஜி

இந்நிலையில், 5ஜி சேவை அக்டோபர் 12-ம் தேதிக்குள் அறிமுகபடுத்தப்படும் என்றும் அடுத்த 2  அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இன்னும் 10 ஆண்டுகளில், 6ஜி தொழில்நுட்ப சேவையை இந்தியா நடைமுறைப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

கடந்த 5 ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உணர்வை மேம்படுத்தும் முயற்சியாக, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த போட்டியில் நடப்பாண்டு சுமார் 29,600 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று, போட்டிகளில் கலந்து கொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்களைக் பற்றி கேட்டறிந்தார். 

மோடி

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கண்ட பசுமை புரட்சியால், தற்போது அந்தத் துறையில் நம் நாடு தன்னிறைவு அடைந்திருப்பதாகக் கூறினார். அதன் தொடர்ச்சியாக, தற்போது விண்வெளிப் புரட்சி, சுகாதாரப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு புரட்சிகளால் சம்பந்தப்பட்ட துறைகள் முன்னேறி வருவதாகக் கூறினார். இந்திய இளைஞர்கள், இந்தியாவுக்காக மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடுகளுக்காகவும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்ளாகவே இந்தியாவில் 6ஜி தொழில்நுட்ப சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web