தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 
இலங்கை மீனவர்கள்

கடும் பொருளாதார தடையில் சிக்கி தவிக்கிறது இலங்கை. உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளைக் கவனிக்கவே நேரமில்லாத இந்த தருணத்தில், இந்தியா முதல் நாடாக ஓடோடி சென்று உதவியது. தொடர்ந்து பல பிரச்சனைகளில் இலங்கைக்கு உதவியும் வருகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற இலங்கைக்கு எதிரான ஓட்டெடுப்பிலும் கலந்து கொள்ளாமல் இந்தியா வெளிநடப்பு செய்தது. ஆனாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை கடந்த 20-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் படகு இலங்கை இராமேஸ்வரம்

இந்நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 7 பேரை கைது செய்துள்ளது. 

இலங்கை கடற்படையின் அட்டூழியம்

விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web